$2 கந்தவேள் கதையமுதம் நாமும் ஒரு வகையில் அவதாரம் பண்ணுகிறோம். அருணகிரி யார் இந்த அவதாரச் சிறப்பைச் சொல்கிறார். "எழுகடல் மணலை அளவீடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்" என்று பாடுகிறார். நம்முடைய பிறப்புக்கும், அம்பிகையின் அவதா ரத்திற்கும் வேறுபாடு உண்டு. இராமன், கிருஷ்ணன் முதலிய வர்கள் உலகத்தில் பிறந்து மக்களோடு மக்களாக உலவினார்கள். அதை வைத்துக்கொண்டு, நாமும் அவர்களும் சமம் என்று எண்ணக் இரண்டு பேர்களும் ஒரேமாதிரி பிறந்தோம் என்று கூடாது. சொல்லக் கூடாது. ஓர் உதாரணம் சொல்கிறேன். ஓர் ஊரில் சுப்பிரமணிய ஐயர் என்று ஒருவர் இருந்தார். அவருக்குச் சின்னப் பிராயத்தில் வேலப்பன், முருகன் என்று இரண்டு நண்பர்கள். சின்ன வயதில் சுப்பிரமணிய ஐயரும், வேலப்பச் செட்டியாரும், முருக முதலியாரும் ஒன்றாகவே விளையாடி னவர்கள்; ஒன்றாகவே சேர்ந்து படித்தவர்கள். சுப்பிரமணிய ஐயருடைய தகப்பனார் சென்னையில் குடியேறிப் பெரிய வியாபாரத் தைத் தொடங்கினதால் சுப்பிரமணிய ஐயரும் சென்னையிலேயே தங்கிவிட்டார். தகப்பனார் காலமான பிறகு வியாபாரத்தையே கவனித்துக்கொண்டார். பல ஆண்டுகளுக்குப்பின் தம் ஊருக்குப் போக நேர்ந்தபோது தம்முடைய பால்ய நண்பர்களைப் பார்க்க வேண்டுமென்ற அவா அவருக்கு எழுந்தது. முருக முதலியாரின் வீட்டிற்குச் சென்றார். “முருக முதலியார் இருக்கிறாரா?" என்று கேட்டார். அவர் ஜெயிலுக்குப் போய்விட்டார் என்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு, "ஏதோ குற்றம் சாட்டப்பட்டு ஜெயி லுக்குப் போய்விட்டார்" என்றார்கள். அதைக் கேட்டு அவருக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று. 'சரி, வேலப்பச் செட்டியாரையாவது பார்த்து வரலாம்' என்று போனார். அங்கே போய் விசாரித்த போது அவரும் ஜெயிலுக்குப் போயிருப்பதாகச் செய்தி கிடைத்தது. அவர் என்ன குற்றம் செய்தார்?" என்று சுப்பிரமணிய ஐயர் கேட்டார். "குற்றம் செய்தாரா! அவர் குற்றம் ஒன்றும் செய்ய வில்லையே! அவர் ஜெயில் விசிடர்" என்று அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்ட பிறகுதான் இரண்டு பேர்களுக்கும் 66
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/72
Appearance