உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதியின் தவம் 53 உள்ள வேறுபாடு புலனாயிற்று. முதலில் போனவர். குற்றம் செய்து ஜெயிலுக்குப் போனவர். இரண்டாவதாகப் போனவர் ஜெயிலில் உள்ள குற்றவாளிகளுக்கு,இனிமேல் குற்றம் செய்யாதீர்கள்' என்று உபதேசம் செய்யப் போனவர். இரண்டு பேர்களும் ஜெயி லுக்குப் போனார்கள் என்பது உண்மையானாலும் இரண்டு பேர் களும் ஒரே நிலையில் போனவர்கள் அல்ல. ஒருவன் குற்றம் புரிந்து தண்டனை அனுபவிக்கப் போனவன். மற்றொருவனோ குற்றவாளியை நல்லவனாக்கப் போனவன். அப்படியே உயிர்கள் உலகத்திற்கு வருவது தாம் செய்த குற்றங்களை அனுபவிப்பதற்காக ; முன் பிறவி யில் செய்த புண்ணிய பாவங்கள் ஆகிய இரண்டுக்கும் ஏற்ப இன்ப துன்பங்களை அநுபவிப்பதற்காக. "ஏழையின் இரட்டைவினை ஆயதோர் உடற்சிறை >> (திருவகுப்பு) இரண்டு வினையாகிய குற்றங்களைச் செய்து இந்த உடம்பாகிய சரீரத்தைப் பெற்றிருக்கிறோம். ஆகவே நாம் நம் கன்மத்திற்கு ஏற்றபடி பிறவி எடுத்திருக்கிருேம். இறைவன் தன் கருணை காரண மாக வந்திருக்கிறான். அவன் கீழே இறங்கி வந்தான் என்றால், நாம் கீழே உருண்டு விழுந்தோம். அதனாலே இந்தக் காயம் வந்தது. மேலே இருந்து கீழே விழுந்தால் காயந்தானே உண்டாகும் ? ஆண்டவன் படிப்படியாக இறங்கி வந்தவனைப்போல வந்துள்ளான். ஆகவே இரண்டையும் சமமாகச் சொல்லக்கூடாது. "இரண்டுபேர்களுக்கும் சரீரங்கள் இருக்கின்றன. ஆகையால் ஒன்றுதான்" என்று சொல்லலாமா? இரண்டு சரீரத்திற்கும் வேறு பாடு உண்டு. நம்முடைய சரீரம் புண்ணிய பாவங்களின் பயனாகத் தோன்றியது.ஆண்டவன் தானே சரீரத்தை அமைத்துக்கொண்டு வருகிறான். திவ்ய தேஜோமய விக்கிரகமாக இருக்கிற அவன் தன் சங்கல்பத்தினால் திருமேனியைக் கொண்டு வருகிறான். வீட்டுக்கும் சிறைக்கும் உள்ள வேறுபாடுதான் இந்த இரண் டுக்கும். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும், இரண்டு பேர்களு டைய உடம்புக்கும் வேறுபாடு உண்டு. சரீரத்தின் வடிவம் ஒரே மாதிரி இருக்கும். சில சமயங்களில் அரண்மணையும் சிறைக்கூடமாக ஆகும். ஆகாகான் வாழ்ந்த அரண்மனை, காந்தியடிகளின் சிறைக்