உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கந்தவேள் கதையமுதம் கூடமாக இருந்தது. இரண்டுக்கும் வேறுபாடு இல்லாததனால் அந்த அரண்மனை சிறையாக இருந்தது. சிறைக்கும் வீட்டிற்கும் என்ன வேறுபாடு? சிறையில் குற்றவாளியை உள்ளே தள்ளி, அவன் வெளியில் வராமல் வெளியே பூட்டுப் போடுகிறார்கள். வீட்டிலோ வெளியில் இருக்கிற திருடன் உள்ளே வராமல் இருக்க, நாமே உள்ளிருந்து தாழிட்டுக் கொள்கிறோம். இதுதான் வேறு பாடு. கட்டிடத்தில் வேறுபாடு இல்லை. அதேமாதிரி புண்ணிய பாவ வினைகள் காரணமாக நாம் இந்த உலகத்தில் உடம்பைப் பெற்றிருக்கிறோம். ஆண்டவன் கருணைகாரணமாகத் திரு அவ தாரம் செய்கிறான். இரண்டு பிறப்பும் ஒன்று என்று சொல்ல முடி யாது. அவன் ஆடுவது நாடகம், விளையாட்டு. நாம் ஆடுவது வினையின் செயல். கன்னிதன் ஆருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே என்று அதனால் தான் கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். தவ விருப்பம் அம்பிகைக்கு ஐந்து பிராயம் நிரம்பியது. அப்போது தாய் தந்தையர்களைப் பார்த்து, "நான் தவம் செய்யப் போகிறேன். சிவபெருமானையே திருமணம் செய்துகொள்ளத் தவம் செய்ய வேண்டும்" என்று புறப்பட்டாள். அப்போது அவளுடைய தாயாகிய மேனை,"நீ போகாதே அம்மா" என்று சொன்னாள். நீ போகவேண்டாம் என்று சொன்னமையினால் உமா என்ற பெயர் உண்டாயிற்று. உமா என்பதற்குப் போகவேண்டாம் என்பது பொருள். தாய்க்குத்தான் குழந்தையின் மேலே ஆசை அதிகம். தவம் செய்வதானால் ஒன்றும் சாப்பிட முடியாது. வேண்டும். சருகுகளை உண்ண வேண்டும். விடும். இவற்றை எல்லாம் எண்ணி, நீ பழங்களையே உண்ண இதனால் உடம்பு வாடி தவம் செய்யப் போக வேண்டாம்" என்று தாய் சொன்னாள். அவள் சொன்னதே அம்பிகையின் திருநாமம் ஆயிற்று; உமா என்ற பெயர் உண்டா யிற்று. பர்வத ராஜனின் புத்திரி ஆதலால் பார்வதி என்ற திரு நாமமும் வந்தது.