56 கந்தவேள் கதையமுதம் எல்லாம் தெரிந்தவர்கள். எல்லா நூல்களையும் கற்றவர்கள். எல்லா வகையான கேள்வி ஞானமும் உடையவர்கள். அவர்கள் படிக்காத நூல் இல்லை. கேளாத கேள்வி இல்லை. சிந்திக்க வேண்டியவற்றை எல்லாம் சிந்தித்து அறிந்தவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. நூல்களில் சந்தேகம் இல்லை. கேள்வியில் சந்தேகம் இல்லை. நூல்களுக்கும், கேள்விகளுக்கும் அப்பாலே அந்தச் சந்தேகம் இருந்தது. இறைவனிடம் சென்று, தெளிவித்தருள வேண்டும் என்று வேண்டினர். அவர்களுடைய ஐயத்தை நூல்களைக் கொண்டு தீர்க்க முடியாது. வாயினாலும் சொல்லித் தீர்க்க முடியாது. கல்வி கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஐயம் அது. அதைத் தீர்க்க வேண்டுமானால் அந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட முறையிலேதான் தீர்க்க வேண்டும். தட்சிணாமூர்த்தியாக எம்பெருமான் எழுந்தருளி அவ்வாறு தீர்த்தாராம். இதைப் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார். கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறைஆ றங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்கள் நாலவருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்." (திருவிளையாடற் புராணம்) (ஆறு அங்கம் - ஆறு சாஸ்திரங்கள்.] பரமேசுவரன் இமாசலத்தில் கல்லால மரத்தின் கீழே தென் முகமாக அமர்ந்திருந்தான். அவன் சின் முத்திரையினால் உபதேசம் செய்தான். வாக்குக்கு அப்பாற்பட்ட ஞானத்தைப் போதிக்கிற கின் முத்திரையை மேற்கொண்டான். அவன் கல்லால மரத்தின் நிழலில் இருந்ததாகப் பாட்டுச் சொல்கிறது. கல்லால மரம் என்பது இச்சி என்று சொல்கிறோமே அதுதான். பாறையின் மேலே முளைக்கிற சிறு ஆல் அது. அதனால் கல்லால் என்ற பெயர் வந்தது. நான்கு வேதங்களை யும், ஆறு சாத்திரங்களையும், 64 கலை ஞானங்களையும் நன்கு கற்று, எல்லா வகையான கேள்விகளிலும் சிறந்த அந்தப் பெரு முனிவர்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/76
Appearance