உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதியின் தவம் 57 களுக்கு உண்டான ஐயத்தை வார்த்தையினால் நீக்க முடியாது; நூல்களை எடுத்துக் காட்டி நீக்க முடியாது. ஆகவே ஆண்டவன் மௌனத்தினால் அவர்களுடைய ஐயத்தைப் போக்கினானாம். இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமல் சொன்னானாம். இருவரும் உணரா அண்ணல் ஏனவெள் ளெயிறு யாமை சிரதிரை அனந்த கோடி நிளைத்திடும் உரத்திற் சீர்கொள் கரதலம் ஒன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி ஒருகணம் செயலொன் றின்றி யோகுசெய் வாரின் உற்குன். (மேரும்படலம், 12.) (ஏளவெள் எயிறு-பன்றியின் வெண் கொம்பு. யாமை - ஆமை யோடு. இரதிரை கபால மாலை. உரத்தில் - மார்பில், மோனமுத்திரை - சின்முத்திரை. யோகு - யோகம்.] பிரமாவும், திருமாலும் அறியாத இறைவன் இப்போது சனகாதி முனிவர் நால்வருக்குமுன் யோகியாக அமர்ந்திருக்கிறான். தன்னு டைய மார்பில் பன்றிக் கொம்பு, ஆமை ஓடு, தலை மாலை ஆகிய வற்றை அணிந்தவன். அந்தத் திருமார்பில் கையைச் சேர்த்து மோனமுத்திரையைக் காட்டுகிறான். ஒரு கணம் எந்த விதமான செயலும் இல்லாமல் யோகம் செய்கின்ற யோகியைப் போல மௌனமாக இருந்தான். சின்முத்திரை தட்சிணாமூர்த்தி தன்னுடைய கையினால் காட்டுவதைச் சின் முத்திரை என்று சொல்வார்கள். முத்திரை என்பது அடையாளம். முத்திரைகள் பல உண்டு. இரண்டு கையையும் சேர்த்துக் காட்டு கிற முத்திரையும், தனித்தனியாகக் காட்டுகிற முத்திரையும், ஒற்றைக் கையால் காட்டுகிற முத்திரையும் உண்டு. ஒற்றைக் கை, இரட்டைக் கை, இணையா இணைக் கை என்று நாட்டிய வகை யில் முத்திரைகளுக்குத் தனித்தனிப் பெயர் உண்டு. மான் என்பதைக் குறிக்க ஒரு வகையில் விரல்களைக் காட்டுவார்கள். தாமரைப் பூவுக்கு ஒரு வகையான முத்திரை உண்டு. அபிநய நூல் இந்த முத்திரைகளைப் பற்றிய இலக்கணங்களை வகுக்கிறது. சிவபூசையில் சில முத்திரைகள் உண்டு. தட்சிணாமூர்த்தி கையிலுள்ள முத்திரை சின்முத்திரை. சித் என்பது ஞானம். ஞானத்தின் அடையாளமாகக் காட்டுகிற குறி 8