53 கந்தவேள் கதையமுதம் அது. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். ஒவ்வொரு கோவிலிலும் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் தெற்குத் திசை தெரிவ தற்குத் தட்சிணாமூர்த்தி ஓர் அடையாளம். கோவிலுக்கு உள்ளே வலம் வந்தாலும் திக்கை அறிந்து கொள்ளலாம். அங்கே நடராஜப் பெருமானும் தென்முகமாக இருப்பார். தெற்குத் திசை காலன் இருக்கும் திசை. காலனால் உண்டா கிற அச்சத்தைப் போக்குகின்ற வகையில் இந்த இரண்டு மூர்த்தி களும் தென்திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறார்கள். இருவருடைய காலின் கீழும் முயலகன் இருக்கிறான். முயலகள் என்பது நம் மனத்தின் உருவந்தான். முயலகனைப் பார்த்தால் அவனிடம் எத்தனை கோணல்கள் இருக்கின்றன என்பது தெரியும். விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இருக்கும். ஒவ்வோர் அங்கமும் வெவ்வேறு வகையில் திரும்பி இருக்கும். இப்படிப் பலவகையில் கோணல்களைக் கொண்ட முயலகன் இறைவன் திருவடியின் கீழே செயலற்று இருந்து விடுகிறான்.நம் மனம் ஒரே சமயத்தில் பலபல வகையில் அலைகிறது. முயலகனைப் போலப் பல திசைகளில் திரும்பி நிற்கிறது. இறைவன் அதன்மேல் எழுந் தருளினால் மனம் நின்றுவிடும். இந்தக் குறிப்பை, தட்சிணாமூர்த்தி, நடராஜா ஆகிய இருவரின் உருவங்களும் உணர்த்துகின்றன. தட்சிணாமூர்த்தி அழைந்து சுக்தி (Static Force) நடராஜா இயங் கும் சக்தி (Dynamic Force} எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கும் பேராற்றல் நடராஜப் பெருமான். அமைந்திருக்கும் ஆற்றல் தட்சிணாமூர்த்தி. நடராஜப் பெருமான் தென்பால் உகந்து ஆடுகிறான். தட்சிணாமூர்த்தியும் தென்பால் உகந்து அமர்ந்திருக்கிறார். அவர் கையில் சின்முத்திரை இருக்கிறது. அதன் பொருள் என்ன? நம் கைகளில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. கட்டை வீரல் எந்தக் காரியம் செய்தாலும் உடன் வரும். என்றாலும் அது எப்போதும் தனித்தே இருக்கும். செயல் செய்யும்போது மாத்திரம் மற்ற நான்கு விரல்களோடு சேர்ந்து செயல்படும். அது இறைவனைக் காட்டுகிறது. ஆண்டவன் நம்மோடு ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கிறான்.நாம் செய்கிற எல்லாக் காரியங்களுக்கும் அவன் துணை வேண்டியிருக்கிறது. ஆனாலும் நாம் அவனுடன் இன்னும் சேரவில்லை.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/78
Appearance