பார்வதியின் தவம் 69 கட்டை வீரலுக்கு அடுத்தது ஆள் காட்டி விரல். அதற்கு ஏன் அந்தப்பெயர் வந்தது ? ஆள் காட்டி விரல் என்று சொல்கிறார்களே. அது எந்த ஆனைக் காட்டுகிறது? கழுதை போனால் அதையுந்தான் அது காட்டுகிறது. ஆளை மட்டுமா காட்டுகிறது? ஆள் என்பது உயிருக்கு, ஆத்மாவுக்குப் பெயர். பெரிய விரல் ஆண்டவனைக் காட்டுகிறது என்று சொன்னேன். அவன் தானே பெரிய பொருள்? பரமேசுவரனாகிய பெரிய பொருளைப் பெரு விரல் காட்டுகிறது. ஆளை,ஆத்மாவைக் காட்டுவது ஆள் காட்டி விரல். அதை அடுத்து இருப்பன மூன்று விரல்கள், அவை மூன்றும் மும்மலங்களைக் காட்டுகின்றன. ஆள்காட்டி விரலோடு ஒட்டியிருக்கிற நடு விரல்- பாம்பு விரல். உயிரோடு ஒட்டியிருக்கிற ஆணவத்தைக் காட்டும். அடுத்த விரல்- மோதிர விரல் - கன்மத்தைக் காட்டும். கடைசியில் உள்ள சுண்டு விரல் மாயையைக் காட்டும். ஆள் காட்டி வீரல் எப்போதும் இந்த மூன்று விரல்களோடு சேர்ந்தே இருக்கும். கையை விரிக்கும் போது கட்டை விரல் தனியாகவும், மற்ற நான்கு விரல்களும் ஒன்றாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். ஆள் காட்டி விரல் மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்து ஒட்டியிருப்பது, ஆன்மா வானது மூன்று மலங்களோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் என்பதைக் காட்டுகிறது. சின்முத்திரையில் ஆள் காட்டி விரல் மூன்று விரல்களையும் விட்டு விட்டுக் கட்டை விரலோடு ஒட்டியிருக் கும். பசுவானது மும்மலங்களை விட்டு இறைவனோடு சேர்ந்திருந்தால் மோட்சம் அடையும் ; அதைத் தெரிந்துகொள்வதே ஞானம். சின் முத்திரை இதைத்தான் காட்டுகிறது. ஆள் காட்டி விரல் பசுவைக் காட்ட, கட்டை விரல் பதியைக் காட்டும் என்று சொன்னேன். பசுவானது மூன்று மலங்களிளின்று நீங்கி இறைவனோடு ஒன்றி விட்டால் இரண்டறக் கலக்கும் இன்பத்தைப் பெறும். இந்த ஞானத்தைக் காட்டுகின்றது சின்முத்திரை. LE ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ" என்று தாயுமானவர் கூறுவர். நடு விரலை ஒட்டியிருந்த சுட்டு விரல் பெரு விரலோடு ஒன்றுவது இந்த அத்து வித நிலையைக் காட்டும்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/79
Appearance