60 கந்தவேள் கதையமுதம் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு இந்த உண்மையைக் கையிலுள்ள விரல்களால், அமைந்த சின்முத்திரையினால் காட்டினார். மிகச் சிறந்த அறிவாளிகளாகிய நான்கு முனிவர்களுக்கும் சின்முத்திரையைக் காட்டியவுடனேயே உண்மை விளங்கிவிட்டது. சிலர் அந்தக் கையைப் பார்த்து, தட்சிணாமூர்த்தி பொடி போடு கிறாரோ என்று பரிகாசமாகக் கேட்பார்கள். அவரவர்களது பக்குவத்திற்கேற்ப இவைகளை உணர்கிற திறம் இருக்கிறது.மிக நுட்பமான விஷயங்களை மிக நுட்பமான அறிவு உடையவர் களால்தான் உணர்ந்து கொள்ள முடியும். நன்றாகக் காய்ந்து உலர்ந்த பட்டாசில் திரி இருக்கிறது. அதில் தீப் பிடித்தவுடன் பட்டாசு வெடித்து விடுகிறது. பட்டாசுக்குள் மண் இருந்தால் வெடிக்குமா? சனகாதி முனிவர்கள் உலர்ந்த பட்டாசைப் போன்ற பக்குவத்தில் இருந்தார்கள். இறைவன் சின்முத்திரையைக் காட்டிய வுடன் அவர்களுக்கு எல்லாம் விளங்கிவிட்டன. மோன நிலை இவ்வாறு ஒரு கணம் சிவபெருமான் யோகநிலையில் இருந்தான். அப்போது உலகம் யாவும் மோன நிலையில் இருந்தன.தேவர்கள், மக்கள், பிற உயிர்க் கூட்டங்கள் யாவுமே யோகநிலையை அடைந்து விட்டன. ஆண் பெண் இருபாலரும் ஒன்றுபடாமல் தனித்தனியே அப்படி அப்படியே இருந்துவிட்டார்கள். காரண முதல்வன் மோனக் காட்சியால் ஆமரர் எல்லாம் சூரர மகளிர் தங்கள் துணைமுலைப் போசும் இன்றி ஆரிடர் நிலைமை தன்னை அடைந்தனர் ; அளக்கர் சூழ்ந்த பாரிடை உயிரும் காமப் பற்றுவிட் டிருந்த அன்றே. (மேரூப்.17.) [காரண முதல்வன் - எல்லாவற்றிற்கும் மூலகாரணனாக இருக்கும் இறைவன். சூரர மகளிர் - தெய்வப் பெண்கள். துனை - இரண்டு, ஆரிடர்- முனிவர்.அளக்கர்'- கடல்.] பரமேசுவரன் பரமேசுவரியை விட்டுத் தனியே யோக நிலையில் இருந்தபோது உயிர்க் கூட்டங்கள் யாவும் ஆண் பெண் ஆசை இல் லாமல் அப்படி அப்படியே இருந்தன. இதனால் என்ன தெரிகிறது? எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கிறவன் ஆண்டவன் என் பதை இந்த நிலை காட்டுகிறது. இதைத்தான் கச்சியப்ப சிவாசாரி யார் இந்தப் பாட்டில் சொல்கிறார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/80
Appearance