உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கந்தவேள் கதையமுதம் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றொரு கதை சொல்கிறார். இறை வனுடைய திருவருள் யார் யாருக்கு எப்படி இருக்கும் என்று கேட்ட போது அதற்கு இந்த உதாரணத்தைச் சொல்கிறார். பூனை குட்டியைத் தன் வாயினால் கவ்விக்கொண்டு நெடுந்தூரம் போகும். அந்தக் குட்டி யைப் பார்த்து, "உன்னைத் தன் வாயில் உன் தாய் கவ்விக்கொண்டு போனபோது உனக்கு எப்படி இருந்தது?" என்று கேட்டால், "அது எவ்வளவு சுகமாக இருந்தது என்று சொல்லத் தெரிய வில்லையே!" என்று சொல்லும். அதே பூனை, ஓர் எலியைத் தன் வாயில் கவ்விக்கொண்டு ஓடுகிறது. அந்த எலியிடத்தில் கேட் டால், ஐயோ! என் உயிரே போய்விட்டதே!” என்று சொல்லும். இரண்டையும் பூனை தன் வாயினாலே கவ்வித்தான் சென்றது. ஆயினும் இந்த இரண்டு பிராணிகளுடைய நிலை வேறு பாட்டினால் ஒன்று சுகத்தையும், மற்றொன்று துன்பத்தையும் அடைந்தன. அதேபோல் இறைவனுடைய கருணை நல்லவர்களுக்கு இன்பத்தைத் தரும்; பொல்லாதவர்களுக்குத் துன்பத்தைத் தரும். இப்படிப் பரமஹம்ஸர் சொல்கிறார். இறைவன் அன்பு உடையவர்களுக்கு நன்மை செய்கிறான், அல்லாதவர்களுக்குத் தீமை செய்கிறான் என்றால் இறைவனுக்குப் பட்சபாதம் உண்டா என்று எண்ணத் தோன்றுகிறது. 'அவன் மேலே ஒரு தவறும் இல்லை.மக்கள்மேல்தான் தவறு இருக்கிறது' என்பதைக் குறிப்பாக வள்ளுவர் புலப்படுத்துகிறார். அன்பு இருந்தால் அறக் கடவுளுடைய செயல் இன்பமாக இருக்கும்; அன்பு இல்லாவிட்டால் துன்பமாக அமையும் என்று சொல்கிறார். அதற்கு உபமானம் சொல்லும்போதுதான், 'எலும்பு இல்லாத புழுவைக் கதிரவனுடைய கிரணம் கொல்லுகிறது. அது போல் அன்பு இல்லாதவர்களுக்கு அறக் கடவுள் துன்பம் தரும், என்கிறார். "என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். இந்த இரண்டு வகையான உதாரணங்களிலும், ஒரே வகையான செயல் இருவேறு வகையான பொருளுக்கு இருவேறு வகையான அநுபவங்களைத் தருவதைப் பார்க்கிறோம். அதுபோலத்தான்