பார்வதியின் தவம் ஆண்டவனது நெற்றிக்கண் மாரனை அழித்தது; அளித்தது. 69 குமாரனை எறிதரு கணிச்சிச் செங்கை ஈசன்மேல் இலக்கம் நாடும் குறியிளர் போல நின்ற கொடுத்தொழில் மாரன் 'துஞ்சும் நெறியினர்க்கச்ச முண்டோ? தினைத்தது முடிப்பன்' என்னா நறுமலர் வாளி ஐந்தும் நாதன்மேல் செல்ல விட்டான். (காமதகனம்.88.) [கனிச்சி - மழு, இலக்கம் - அம்பை விடும் குறி. துஞ்சும் நெறியினர்க்கு- இறக்கும் வழியில் நுணிந்து நிற்பவர்களுக்கு __ பாசி கிரம்பிய குளத்தில் ஒரு கல்லைப் போட்டால் அதன் அதிர்ச்சியில் சிறிது பாசி விலகும். னே மறுபடியும் பாசி அந்த இடத்தை வந்து மூடிக்கொள்ளும். அதுபோல இறைவன் காமனது அம்பு பட்டவுடன் சிறிது தனது விழியைத் திறந்தான். மன்மதன் அழிந்து போனான். ஆண்டவன் மறுபடியும் பழைய நிலையில் அமைதி யாக இருக்கலானான். மன்மதன் செய்த காரியம் அவனுக்கே தீங்காக முடிந்தது. அத்தனை தேவர்கள் இருந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேவர் செயல் தாய்கள் செய்த தந்திரத்தால், தங்களுக்கு எந்த விதமான நன்மையும் உண்டாகவில்லை என்பதையும், காமன் அழிந்துவிட்டான் என்பதையும் உணர்ந்து தேவர்கள் மனம் வருந்தினார்கள். 'பழைய படியே அவர் மோன ஞானியாக இருந்துவிட்டாரே! பார்வதி தேவி யையும், பரமேசுவரனையும் எப்படிச் சேர்ப்பது? என்று அவர்கள் கவலைப்பட்டார்கள். மைஉ, லாவரு கறைமிடற் நிறையவன் மருங்காக எய்யும் மாரனை விடுத்தனம் ; அவனையும் இறச்செய்தான்; பொய்யில் தன்நிலை தவிர்ந்திலள்; தொன்மையே போலுற் ழூன்; ஐய கோஇனிச் செய்வதென் னோஎனா அயர்கின்றார். (மோன நீங்கு.S.) (மை உலாவரு கறைமிடற்று இறையவன் - கரிய நிறம் பரவிய நஞ்சக் கறை யைக் கழுத்திலே உள்ள சிவபிரான். இற - அழிய.அயர்கின்றார் - சோர்கின்றனர்.] ஆண்டவன் நீலகண்டப் பெருமான் ; உலகத்தை எல்லாம் அழிக்க எழுந்த ஆலகால விடத்தைத் தன் கழுத்தில் அடக்கிக் கொண்டவன். அவனுக்கு மாரன் அம்பு எம்மாத்திரம்?
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/89
Appearance