உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கந்தவேள் கதையமுதம் தேவர்கள் எல்லாம் தங்களுடைய துன்பம் தீருவதற்காக இறை வனிடத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம் என்று எண்ணினார் கள். பின்பு கைலாயத்திற்குச் சென்று நந்தியம் பெருமானிடத்தில் விடை பெற்று உள்ளே புகுந்தார்கள். இறைவனைத் துதித்தார்கள். ஆண்டவன் அப்போது யோக நிலையை தீத்து நின்றான். "எங்கே வந்தீர்கள்?" என்று கேட்க, "சூரனுடைய உயிரைப் போக்குவ தற்குக் குமாரனை அருள் செய்ய வேண்டும். அதற்கு முன்பு இமாசலத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் பார்வதி தேவியைத் திருமணம் செய்துகொண்டருள வேண்டும்" என்று வேண்டினார்கள். 16 இந்த காமன் இறந்த பிறகு அவனுடைய மனைவி இரதி மிகவும் வருந்திப் புலம்பினாள். ஆண்டவனிடத்தில் வந்து ஏங்கி, நிலையை உண்டாக்கிவிட்டீர்களே!" என்று அழுதாள். அப்போது எம்பெருமான், "நாம் பார்வதியைத் திருமணம் செய்துகொள்ளும்போது உன் கணவனை மீட்டுத் தருவோம்" என்று அருள் புரிந்தான். தேவர்களைப் பார்த்து, "உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம்" என்று அநுக்கிரகம் செய்தான். சிவபிரான் செய்த சோதனை சிவபெருமான் தவம் செய்யும் உமாதேவியிடம் சென்று அந்தப் பிராட்டியைப் பல வகையில் சோதனை செய்யலானான்.தகப்பன் எப்படியோ அப்படியேதான் பிள்ளை. பின்னாலே வள்ளிதேவியிடம் முருகப்பெருமான் சென்று பலவகைச் சோதனைகளைச் செய்கிறான். அங்கே முருகன் கிழவனாகச் சென்றான். இங்கேயும் சிவபெருமான் முதிய கோலத்தோடு போனான். செறிதுவர் உடையாளன், சிகையினன், அணி நீற்றின் குறியினன்,ஒளிர்நூலன், குண்டிகை அசைகையன், உறைபனி கதிர்போற்றும் ஓலையன், உயர்கோவின், மறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனாள். (தவங்காண் படலம்,2.) (துவர் உடை நீர்க்காக்ஷி ஏறிய உடை. சிகையினன் - குடுமியை உடையவன். நூலன் - பூணூலை அணிந்தவன். குண்டிகை - கமண்டலம். குறி - அடையாளம். பனி கதிர் போற்றும் ஓலையன் - பனியையும் வெயிலையும் தடுத்துப் பாதுகாக்கும் குடையை உடையவன்.]