பார்வதியின் தவம் 71 விருத்த வேதியனாகச் சிவபெருமான் சென்றான். இங்கே, செறிதுவர் உடையாளன் காவி ஆடையுடைய என்று பாடுகிறார் கச்சியப்ப சிவாசாரியார். துவராடை என்பது காவி ஆடையைக் குறிக்கும் சொல். சைவ சந்தியாசி சிகையும், பூணூலும் அணிய மாட்டான். அப்படி இருக்க, இங்கே காவி ஆடையும், சிகையும்,நூலும் என்று சொல்லி யிருக்கிறாரே என்ற ஐயம் தோன்றும். இங்கே துவர் என்பது காவி அல்ல. நீர்க்காவி படிந்த ஆடையை அணிந்திருந்தான். முன் காலத்திலே அந்தணர்கள் பல காலம் ஆற்று நீரிலே துவைத்துத் துவைத்து நீர்க்காவி ஏறிய ஆடையையே அணிவார்கள். அந்த நீர்க்காவியைத்தான் இங்கே துவர் என்று சொல்கிறார். இடையிலே நீர்க்காவி ஏறிய ஆடை, தலையிலே குடுமி, நெற்றி யிலே விபூதி; மார்பிலே பூணூல், கையிலே கமண்டலம், வாயில் வேத ஒலி - இத்தகைய அரிய கோலத்துடன் ஆண்டவன் பார்வதியை அணுகினான். பார்வதி தேவிக்கு ஜயை, விஜயை என்று இரண்டு தோழி மார்கள். உமாதேவி தவம் செய்கின்றபோது அவர்கள் இருவரும் அவளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். எம்பெருமான் முதிய கோலத்தோடு எழுந்தருளியபோது அவ னுக்கு வேண்டிய உபசாரங்களை இருவரும் செய்தார்கள். உமாதேவியைய நோக்கி முதிய மறையவனாக வந்த ஆண்டவன் பேசினான். "உன்னுடைய சிறந்த அழகு வீணாகும்படி இப்படித் தவம் செய்கினாயே! எதற்காக இவ்வாறு செய்கிறாய்? உன் விருப்பம் என்ன?” என்று கேட்டான். அம்பிகையைப் பார்த்தால் கொழுகொழு என்று இருக்கிறாள். தவத்தினால் அந்த அழகு குன்றுவதைக் கண்டு இரங்குவானைப்போல ஆண்டவன் கேட்டான். அப்பொழு துமைதள்ளை ஆதர வொடுபாராச் செப்புதல் அரிதாம்உன் திருநலன் அழிவெய்த மெய்ப்படு தசைஓல்க மிகுதவம் முயல்கின்றாய்; எப்பொருள் விழைவுற்றய்? எண்ணிய துரைஎன்றான். (தவங்காண்.7) (ஆதரவொடு -அன்போடு, திரு நலள் - மிக்க அழகு, ஒல்க - தனர.)
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/91
Appearance