உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கந்தவேள் கதையமுதம் இந்தக் காலத்துப் பெண்ணாக இருந்தால் உடனே, 'நான் ஒருவரைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தவம் செய்கிறேன்' என்று சொல்வாள். அம்பிகையோ நாணம் உடையவள். எல்லாப் பெண் களுக்கும் நாணம் அழகு. அம்பிகை பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டு மென்பதைத் தன் செயலால் காட்டுகிறாள். இறைவன் கேட்ட கேள்விக்கு உமாதேவி தானே பதில் சொல்லவில்லை. கண்ணால் குறிப்புக் காட்ட விஜயை சொல்லத் தொடங்கினாள். "எல்லா உயிர்களுக்கும் உயிராக இருக்கின்றவனும் நெற்றிக் கண் படைத்தவனுமாகிய பரமேசுவரனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது இந்தப் பிராட்டியின் விருப்பம். அவனைத் திருமணம் செய்துகொண்டு அவனது வாம் பாகத்தில் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இவள் இந்தத் தவம் செய்கிறாள் ' என்று சொன்னாள். அதனைக் கேட்டவுடன் சிலபெருமான் நகைத்துச் சொல்லத் தொடங்கினான். மன்னுயிர்க்குயிர் ஆகிய கண்ணுதல் மணஞ்செய்து தன் இட த்தினில் இருத்தினன் கொள்வதே தான்உள்ளிக் கன்னி மெய்த்தவம் இயற்றிகள் என்றுகா தவிகூற முன்ன வர்க்குமுன் னானவன் நகைத்திவை மொழிகின்றான். . எண்ணி. (தவங்காண்.8.) காதலி - தோழி.] (நன் இடத்தில் - தன் வாம் பாகத்தில். உள்ளி முதலில், ஆண்டவன் எல்லோரும் அணுகுவதற்கு அரியவன் என்று அவன் பெருமையைச் $1 சொல்வதுபோலச் சொன்னான். சங்கரன் ஆகிய இறைவன் எல்லோருக்கும் எளியவனாக வருவானா? உலகத்தை உண்டாக்குகின்ற தேவர்களும் அறிவதற்கு அரியவன் ஆயிற்றே! இந்தச் சிறிய பெண் செய்கிற தவத் திற்காக அவன் வருவானா? அப்படி வந்தாலும் இவளுடைய விருப் பத்திற்கு இணங்கி மணந்து கொள்வானா? அறியாமையால் இவள் தவம் செய்கிறாள்” என்று சொன்னான். புவிஅளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றன் இவஸ்த வத்தினுக் கெய்துமோ? எய்தினும் இனையாளை அவன்வி ருப்பொடு வரையுமோ ? உமையவள் அறியாமே தவம்இ யற்றினள்; எனியனோ சங்கரன் தனக்கம்மா? (தலங்காண்.10.) (வரையுமோ - மணம் புரிந்து கொள்வானா? தனக்கு - உமா தேவிக்கு]