பார்வதியின் தவம் 73 இவளுடைய திருமேனி மேலும் அழகு பெற வேண்டியது; நன்றாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது. அதை விட்டுவிட்டு இந்த உடம்பு துன்புறும்படி இவள் நிற்கிறாளே! அதனால் கிடைக் கின்ற பயன் என்ன? எல்லோருக்கும் கிடைப்பதற்கு அரிய பொரு ளாக இருப்பவன் இவளுக்கு எளிதில் கிடைப்பானா ? மிக எளிதில் கிடைக்காத ஒன்றுக்குத் தன் அழகை எல்லாம் பாழ்படுத்திக் கொண்டு பல காலம் வீணாக இந்தக் காரியத்தைச் செய்கிறாளே! இதை விட்டுவிடுவது நல்லது" என்று இறைவன் சொன்னான். ஆல்லல் பெற்றிட நோற்றிடு பகுதியால் ஆ லொன்று இல்லை; இத்துணைப் பெறலரும் பொருளிவட் கெளிதாமோ? பல்ப கல்தன தெழில்நலம் வறிதுபட்டனவன்றே? ஒல்லை இத்தவம் விடுவதே கடன்இனி உமைக்கென்றான். (தவங்காண்.11) (ஆம் பால் ஒன்று - ஆகின்ற பயன் ஒன்று. வறிது பட்டன . வீணாயின. ஒல்லை - விரைவில்.] இது வரையில் உமாதேவி வாளா இருந்தாள். சிவபெருமான் இப்படிச் சொன்னவுடன் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. ஓர் உணர்ச்சி விஞ்சும்போது மற்ற இயல்பான பண்புகள் மறைந்து விடும். ஆகவே, உமாதேவி சினம் கொண்டான்; கோபம் வந்த வுடன் நாணம் போய்விட்ட . து. இவருடைய நெற்றியில் உள்ள நீற்றைப் பார்த்துச் சிவபெரு மானுடைய அன்பர் என்று எண்ணினேன். தோற்றத்தைப் பார்த்து அந்தணர் என்றும், பிராயம் முதிர்ந்த கிழவர் என்றும் எண்ணி னேன், இவர் இப்படி வெம்மையான சொற்களைச் சொல்வார் என்று அறிந்து கொள்ள வில்லை' எனப் பெருமூச்சு விட்டு, அவர் சொன்ன வார்த்தைகளைப் பொறாமல் பேசத் தொடங்கினாள். இந்த வாசகம் கேட்டலும், எம்பிராற் கிவர்அண்பர், அத்தண் மாமுது குரவரென் றுன்னினன்; அறியேனால், வந்து வெம்மொழி கூறுதல், எனச்சினம் மனங்கொண்டு நொந்து யிர்த்துநாண் நீக்கியே பொருதுமை நுவல்கின்றாள். (தவங்காண்.12.1 [வாசகம்: வார்த்தை. கேட்டலும் - கேட்டவுடன். அந்தண் மாமுது குரவர் பிராமணக் கிழவராகிய பெரியோர், வெம்மொழி கூறுதல் அறியேன் : உயிர்த்து பெருமூச்சு விட்டு,} 10
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/93
Appearance