பார்வதியின் தவம் மாகக் கொள்பவர்கள். 76 அதற்குமேல் முத்தி என்ற ஒன்று உண்டு என்று ஆசைப்படமாட்டார்கள். முத்தி வேண்டியது இல்லை என்ற விறலோடு இருப்பார்களாம். என்று "வீடும் வேண்டா விறலின் விளங்கினார்? சொல்கிறார் சேக்கிழார். அருணகிரிநாத சுவாமிகள் வேளைக்காரன் வகுப்பில் இதே இயல்பை எடுத்துக் காட்டுகிறார். ஆனபய பக்திவழி பாடுபெறு முத்தியது ஆகநிகழ் பக்தஜன வாரக்காரனும்.' 24 அன்பர்கள் முத்தி என்று வேறு ஒன்று இருப்பதாகவே எண்ண மாட்டார்களாம்; தாம் செய்கிற வழிபாடே முத்தி என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே எம்பெருமாட்டி இங்கே, "இறைவன் எனக்கு நலம் செய்யாவிட்டாலும் நான் தவம் செய்வதை நிறுத்தமாட்டேன்" என்று சொல்கிறாள். இந்த நிலை மிகச் சிறந்தது. இதனைக் கேட்ட சிவபெருமான் தன் பேச்சை மாற்றினான். இது வரைக்கும் இறைவன் பெருமையைக் கூறி, அவன் எல்லாராலும் அடைவதற்கு அரியவன் என்று சொன்னான். இப்போது சிவபெரு மானை இழித்துக் கூறுவானைப்போலப் பேசத் தொடங்குகிறான். பெண்ணே, நீ விரும்புகின்றாயே, அவன் எத்தகையவன் தெரியுமா? மன்னவன் மகளாகிய உன்னை மணம் செய்துகொள்வ தற்குரிய தகுதி அவனுக்கு ஏது? அவன் கட்டுகிற ஆடை எது தெரியுமா? ஜவுளிக் கடையில் வாங்குவது அல்ல; கசாப்புக் கடையில் வாங்குகிற தோல். அவன் ஏறிச் செல்லும் வாகனம் எது தெரியுமா? வண்டியில் பூட்டுகிற காளையை அவன் வாகனமாகக் கொண்டிருக்கிறான். அணிகலன்களைப் அவன் அணிந்துகொள்கிற பார்த்தால் பயத்தையும், அருவருப்பை யும் உண்டாக்கும். பாம்பையும், எலும்புகளையும் அவன் மாலைகளாக அணிந்திருக்கிருன். வெண்தலை, மாலையாக இருக்கிறது. அவன் மார்பில் பன்றிக் கொம்பு மெடலைப் போலத் தொங்குகிறது. அவன் தொழில் பிச்சை எடுப்பது. அதற்காவது நல்ல பாத்தி ரத்தை வைத்திருக்கிறானா? அதுவும் இல்லை. மண்டை ஓடு ஆகிய பாத்திரத்தில் அவன் பிச்சை வாங்குகிறான்.
ஊரெல்லாம் சுற்றிப்