உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கந்தவேள் கதையமுதம் பிச்சை வாங்குகிறவன். சில சமயங்களில் நஞ்சையே உணவாக உண்கிறான். அவன் வாழ்கிற இடம் எது தெரியுமா? செத்துப் போனவர்களைச் சுட்டு எரிக்கின்ற சுடுகாடுதான் அவன் இருக்கும் இடம். அங்கே அவன் கூத்தாடுகிறான். நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிற கடவுளாகிய சிவபெருமான் இத்தகைய நிலையில் இருக்கிறான். அவனையா நீ திருமணம் செய்ய நினைக்கிறாய்? அவன் அணிந்து கொள்வது மணமுடைய மலர் அன்று ; வெள்ளெருக்கை அணிகிறான் ; அறுகை அணிகிறான்: யாரும் அணியாத கொன்றை மலரை அணிந்திருக்கிறான்; நொச்சி, ஊமத்தை ஆகியவைகள் நால் லாம் அவன் விரும்பும் மலர்கள். அவன் பூசுகின்றது சந்தனம் அல்ல; மயானத்திலே இருக்கிற திருநீறு. அவன் கையில் ஏந்துகிறவை சூலம், மான், மழு, துடி, தழல் என்பன. அவனுடைய படை எது தெரியுமா? பூத பைசாசங்கள். இத்தகைய தோற்றத்தோடிருக்கிற ஒருவனையா கணவனாக்கிக் கொள்ள விரும்புகிறாய்?" சொன்னான். என்று ஆடை தோல், விடை ஏறுவ தணிகலம் அரவென்பு, கேடில் வெண்டலை மாலிகை கேழலின் மருப்பின்ன, ஓடு கொள்கலம், ஊண்பலி வெய்யநஞ் சுலப்புற்றோர் காட தேநடம் புரியிடம், கண்ணுதற் கடவுட்கே. வேய்ந்து கொள்வது வெள்ளெருக் கறுகுநீர் வியன் கொன்றை பாந்தள் நொச்சியே மத்தமென் றினையன பலவுண்டால் ; சாந்தம் வெண்பொடி ; சூலம்மான் மழுத்துடி தழலங்கை ஒந்து கின்றன ; பாரிடம் சூழ்படை இறையோற்கே. 4 (தவங்காண்.15,16.) [வெண்டலை - கபாலம். மாலிகை -மாலை. கேழலின் மருப்பு - பன்றிக் கொம்பு. கொள்கலம் - பாத்திரம். பவி-பிச்சை. உலப்புற்றோர் - இறந்தோர். பாந்தள் பரம்பு. மத்தம் - ஊமத்தை. சரந்தம் -சந்தனம். துடி -உடுக்கை. பாரிடம் - பூதம்.]

அவனுக்குக் குலம், கோத்திரம் இல்லை. தாய் தந்தை இல்லை. அழகு வடிவம் கிடையாது. குணம் எதுவும் இல்லை.இவை கள் எல்லாம் அவனுடைய பெருமைகள். இவை எல்லாம் உனக்கும் உரிமையாகவேண்டுமென்றோ தவம் செய்து இளைத்துப் போகிறாய்? மிகப் பெரிய சிறப்பை உடைய அரசனுடைய பெண்ணாகிய நீ