உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதியின் தவம் 97 இப்படியெல்லாம் செய்யலாமா? இது உனக்குப் பொருந்துமா? என்று கேட்டான். அன்னை தாதைகேள் வடிவொடு குணங்கள்இல் அணையா னுக்கு இன்ன வாகிய மலவளன் உண்டு; அவை எவையுந்தாம் நின்ன வாகவோ தவம்புரிந் தெய்த்தனை ? நெடுந்தொல்சீர் மன்னன் மாமகட் கியைவதே இந்துணை வழக்கென்றான். [கேள் - உறவினர். இயைவதே - பொருந்துவதா?] (தவங்காண்.17) இது - இல்லாத. எய்த்தளை - இணைத்துப்போனுப். இதனைக் கேட்ட உமாதேவி தன் காதைப் பொத்திக் கொண் டாள். அவளுடைய சினம் மேலும் மூண்டது. " அந்தண வேடத் தோடு வந்திருக்கிறீரே தவிர, நீர் சொல்லத் தகாத சொற்களைச் சொல்கிறீரே ! எம்பெருமானிடத்தில் சிறிதளவாவது உம் மனத்தில் அன்பு இருக்கிறதா? இந்த வேடத்தைப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர். காட்டிலுள்ள பறவையைப் பிடிப்பதற்குப் புதரில் மறைந்து வேடன் குரல் காட்டுவதுபோல நீர் செய்கிறீரே!" என்கிறாள். இங்கே கச்சியப்ப சிவாசாரியார் ஒரு திருக்குறள் கருத்தை எடுத்தாள்கிறார்; 74 தவமறைந் தல்லவை செய்தல், புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று" என்ற திருக்குறள், பொய்யான தவம் உடையவர்களைப் பற்றிச் சொல்கிறது. அதையே அம்பிகை திருவாக்காகக் கச்சியப்ப சிவாசாரியார் ஆளுகிறார். கேட்டியால் அந்த ணாள, கேடிலா எம்பி ரான்றன் மாட்டொரு சிறிதும் அன்பு மனத்திடை நிகழ்ந்த தில்லை; காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதல்மேற் கொண்ட வேட்டுவன் இல்போல் மேலோன் வேடம்நீ கொண்ட தன்மை (தவங்காண்.19) [புள்ளின் சூழல் - பறவைகளின் கூட்டத்தை. புதல் - புதர்; செடி.] இங்கே எம்பெருமானைப் பற்றி முதிய வேடத்தில் வந்த இறைவன் சொன்ன செய்திகள் சிலவற்றை ஆராய வேண்டும்.