பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

ஏர்தரு குமரப் புத்தேள் இவ்வகை இசைப்ப அன்ருேர் கார்தரு கண்டத் தெந்தை காதல வேள்வித் தீயில் சேர்தரு தகரின் ஏற்றைச் சிறிய ரேம் உய்யும் ஆற்ருல் ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்திடல் வேண்டு என்ருர் என்னலும் தகரை அற்றே ஆனமாக் கொள்வம் பார்மேல் முன்னிய மகத்தை நீவிர் முடித்திரென் றருள யார்க்கும் நன்னய மாடல் செய்யும் நாரதன் முதலோர் யாரும்

அன்னதோர் குமரன் எந்தை அடிபணிந் தருளல்

போந்தார்

என்னும் கந்த புராணச் செய்யுட்களால் தெரியவருகின்றன.

ஈண்டு மற்றும் ஒரு குறிப்பினையும் தெளியவேண்டிய வராய் உள்ளோம். ஆடு ஆறுமா முகனுக்கு ஊர்தியாக அமைந்தது. நாரதன் வேள்வி, காரணமாக என்று புரா ணத்தின் மூலம் கண்டோம் அல்லமோ? ஆல்ை, பரிபாடல் என்னும் பழம்பெரு நூல் அதாவது சங்ககால நூல் இந்த ஆடு இயமனுல் முருகப்பெருமானுக்குக் கொடுக்கப்பட்டது என்ற அரிய குறிப்பை வெளிப்படுத்துகிறது. அக் குறிப்புக் காணப்படும் இடத்திலேயே மற்றும் சில அரிய குறிப்புக்களையும் தெரியவருகின்ருேம். அவையே, அக் கினி பகவான் ஆறுமாமுகனுக்கு ஆனை ஈந்தது; இந்திரன் இனியமா முருகனுக்கு இன்மயில் ஈந்தது என்பதாம்.

அல்லல்இல் அனலன் தன் மெய்யில் பிரித்துச் செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து வளம்கெழு செல்வன்தன் மெய்யில் பிரித்துத் திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன் திருந்துகோல் ஞமன் மெய்யில் பிரித்து இருங்கண் வெள்யாட்டு எழில் மறி கொடுத்தோன் என்பன அப்பரிபாடல் அடிகள்.

மேலே காட்டப்பட்ட அடிகளில் மயில் ஊர்தி சூரபது மன் முருகப்பெருமானிடம் தோற்று மயில்வாகனமாக மாறி