பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 89.

சென்னி' என்று விவேக சிந்தாமணியும் விளக்கிக் கூறு கிறது. திருப்பதி என்பது ஈண்டு சிறந்த அழகிய த்ேவா லயங்கள் என்பதாம்.

இவ்வாறு இறைவன் வீற்றிருக்கின்ற ஆலயங்கள் எங்கும் இருப்பினும், சிறப்புடைய ஆலயங்களாகச் சில வற்றைக் கூறுவதும் உண்டு. இறைவன் மண், நீர் நெருப்பு, காற்று, வெளி யாகிய ஐம்பெரும் பூதவடி வினன் என்பதை விளக்கி நிற்கும் பஞ்ச பூதத் தலங்கள்ை உதாரணமாகக் காட்டலாம். அவை முறையே திரு வாரூர், திருவானைக்கா, திருவருணை, திருக்காளத்தி, திருத் தில்லை என்பன. திருவாரூர் இறைவன் பிருதிவி (மண்) வடிவானவன் என்பதை ஆண்டுள லிங்கம் புற்று வடி வாய்த் திகழ்வது கொண்டு தெளியலாம். இது குறித்தே அவனைப் புற்றிடங் கொண்ட புனிதன் என்றும், வன்மீக நாதன் என்றும் வழங்குவர். (வன்மீகம்-புற்று.) காஞ்சியம் பதியைப் ப்ருதிவித்தலம் என்று கூறும் மரபும் உண்டு, திருவானைக்க அண்ணல் நீர் வடிவாய் நிலவுபவன். இந்த உண்மையினை இன்றும் அவனது திருமேனி நீரால் சூழப்பெற்றுத் திகழ்வதா ற் காணலாம். எவ் வளவுதான் இறைத்து இறைத்து நீரைப்போக் கிலுைம் நீர் ஊற்றெடுத்து இறைவன் திரு மேனியை நிறைத்துவிடும். திருவருண என்பது திருவண்னமலை யாகும். இன்றும் திருவண்ணுமலே முலட்டானத்தை அணுகி உற்றுக் கவனித்தால் நம்மீது ஏதோ அக்கினிச் சுவாலே வீசுவது போன்ற உணர்ச்சியை உணரலாம். இஃது அவ்விடத்து இறைவன் நெருப்பு உருவின்ன் என்ப தற்கு அறிகுறி அன்ருே திருக்காளத்தி இறைவன் காற்றுவடிவினன் என்பதையும் கண் கூடாகக் காணலாம். மூலட்டானத்துள் இறைவனைச் சூழ்ந்து பல திருவிளக்கு கள் எரிந்து கொண்டிருக்கும். அவற்றுள் ஒரு விளக்கு