பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

அதாவது, மாவடிமாகிய சூரனை இருபிளவாக வேல் பிளந் தது என்பதாம்.

இருபிளவாகச் சூரன் வீழ்ந்தும் மடிந்தான் இல்லை. அவ்விரு பிளவுகளுள் ஒரு பிளவில் மயில் வடிவுடனும், மற்ருெருபிளவினுள் சேவல் வடிவுங் கொண்டும், வந்து முருகன் முன்னர்,

மணிகிளர் வரைய தொன்றும் மாகதப் பிறங்கல் ஒன்றும் துணையடி சிறகர் பெற்றுச் சூல்புயல் அழிய ஆர்த்துத் திணிநில விசும்பின் மாட்டே சென்றெனச் சேவலோடு பிணிமுக உருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான்

அதுபோது முருகப்பெருமான், குக்குட உருவை நோக்கிக் கடிதில் நீ கொடியேயாகி, ஆர்த்தி என்று கூறிச் சேவலைக் கொடியாகக் கொண்டும், மயிலை நோக்கி, 'சுமக்குதி எம்மை' என்று கூறி,பார்திசை வானம் முற்றும் பரிஎன நடத்தலுற்றன். இவ்வாறு தீயகிைய சூரன் இறுதி யில் முருகன் திருவருளால் இன்பமே உற்ருன். இதனை வியந்து கந்தபுராணம்,

தீயவை புரிந்தா ரேனும் குமரவேள் திருமுன் உற்ருல் தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் அந்நாள் செய்த மாயையின் மகனும் அன்ருே வரம்பிலா அருள்பெற் றுய்ந் தான

என்று பாராட்டுகின்றது.

ஈண்டு நாம் ஒர் அருமைக் குறிப்பையும் அறிதல் வேண்டும். குமரப் பெருமான் ஏன் மயிலேவாகன மாகவும் சேவ8லக் கொடியாகவும் கொண்டனர்? காரணம் இருக்க வேண்டும் அன்ருே? மயிலின் மாண்பைப் பற்றிப் பேசிய இடத்தில் மயில் 'ஆனதனி மந்திர ருபநிலை கொண்டது