பக்கம்:கனவுப்பாலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கனவுப் பாலம் இவ்வள்வுபீெரிய் திட்டல் இப்படி ஒரு சப்ஸ்iண்ட்” அடிப்பானேன்?- அவனுடைய துப்பறியும் புத்தி வேலே செய்தது. தங்கள் ஒட்டலே விளம்பரப் படுத்த இம்மாதிரி 'குறுக்கு வழி உபாயம் அவர்கள் தரத்துக்கு சரியானதல்ல. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. குண்டு குண்டாக எழுத்துக்கள் பெண் கையெழுத்தா யிருக்குமோ? அழைப்பிதழை மறுபடியும் படித்தான். திடீரென்று எங்களிடமிருந்து இப்படி ஒர் அழைப்பிதழ் வந்திருப்பது தங்களுக்கு மிகுந்த வியப்பாயிருக்கலாம். இந்தப் புதிய கடற்கரை ஓட்டலில் தாங்கள் அவசியம் ஓர் இரவு தங்கி இந்த ஒட்டலின் வசதிகளேயும், ஆடம்பரங் களேயும், இன்பங்களேயும் அனுபவிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தாங்கள். எங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வதாயிருந்தால் அடுத்த சனிக்கிழமை ஆகஸ்ட் முதல் தேதி மாலே ஆறு மணிக்கு வரவும். இந்தக் கடிதத்தை ரிஸப்ஷன் டெஸ்க்கில் காட்டில்ை, அவர்கள் உங்களே நீங்கள் தங்க வேண்டிய அறைக்கு அழைத்துச் செல்வார்கள். பயணச் செலவுக்கு வேண்டிய பணத்தை யும் இத்துடன் இணைத்துள்ளோம்.' தங்கள் வரவை எதிர்பார்க்கும், கடல்? கடல் கடல்கூட அழைப்பு விடுமா? ஒரு வேளை யாராவது தெரிந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள். தமாஷ் செய்திருப்பார்களோ ஏப்ரல் முதல் தேதி கூடப் போய் விட்டதே. என் அசல் பெயர், விலாசம் தெரிந்த யாரோ ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். போவ்தா. வேண்டாமா?--யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தான், போவது என்பதே அந்த முடிவு. அதற்கு மூன்று முக்கிய ಹTT65ಠTIE15: முதலாவது வந்திருப்பது ஐம்பதாயிரம் யென். பெரிய தொகை. இதை எழுதியவர் விலாசம் தராததால் பணத்தைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/32&oldid=768625" இலிருந்து மீள்விக்கப்பட்டது