உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  85

60  வயங்குதமிழ் வளர்ப்பதற்கு
வன்முறை இயக்கம் ஒன்று தேவை!

மென்முறையாய் அன்போடும் அறிவோடும்
மிகச் சொல்லி மேந்தமிழை வளர்க்கும் பாங்கைப்
பன்முறையாய் விளங்கவைத்தும் பயனில்லை;
பாழ்மொழியும் பிழைமொழியும் பல்கக் கண்டோம்!
என்முறையாய்ச் சொன்னாலும் எழுதியுண்ணும்
எத்தர்களும் தாளகரும் இணங்க மாட்டார்!
வன்முறையாய் இயக்கமொன்று தேவையிங்கே;
வணிகரையும் வம்பரையும் வயக்கு தற்கே!

நற்றமிழில் இல்லாத வணிகர்வரிப்
பலகைகளைப் பெயர்த்தகற்றி நலித்தல் வேண்டும்!
சொற்றமிழில் பிழைசேர்க்கும் கலப்புமொழி
எழுத்தாளர் இல்லங்களைச் சூழ்ந்து நின்று,
முற்றுகையிட் டவர்குற்றம் எடுத்துரைப்போம்;
தாளிகைகள் நிலைமாற முறையாய்க் கேட்போம்!
அற்றெனிலவ் வெழுத்துகளைப் புறக்கணிப்போம்!
தாள்களையும் குவித்தொருங்கே தணல்சேர்ப் போமே!

-1982

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/112&oldid=1513093" இலிருந்து மீள்விக்கப்பட்டது