பக்கம்:கனிச்சாறு 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


63  தமிழ்க்குலமே தெளிக!

எங்குமுள பரம்பொருளைக் கோவிலுக்குள் -
கருவறைக்குள் இருத்தியதாய் எண்ணியங்கே
தங்குமொரு சொறிபிடித்த பார்ப்பானை
ஆரியனைத் தரகனெனக் குந்த வைத்து
முங்கியடித் தவன் முன்னே பழந்தேங்காய்த்
தட்டெடுத்து நீட்டி அவன் முணுமுணுக்கும்
வெங்காய மந்திரத்தை விரும்பியதா
லன்றோ,நாம் இன்றுவரை வீழ்த்தப் பட்டோம்!

கோவிலினைச் சமைத்தவர் நாம்! படிமமொன்றை
நட்டவர்நாம்; பொன்மணிகள் கோடிக்கோடி
மேவலுற இழைத்தவர் நாம்; ஆண்டு தோறும்
விழாப் பலவும் எடுத்தவர் நாம்; மெய்த்தொண் டென்றே
காவலராய் அமர்ந்தவர் நாம்; சேர்ப்பவர்நாம்;
காப்பவர் நாம்; கடைகெட்ட பார்ப்பான் மட்டும்
தேவனென உட்புகுந்து தின்பதுவோ?
தெறிப்பதுவோ? தமிழ்க்குலமே, தெளிவாய் இன்றே!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/140&oldid=1424761" இலிருந்து மீள்விக்கப்பட்டது