பக்கம்:கனிச்சாறு 2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 173


112

எரிந்து சாம்பலாகட்டும்!


மனு நூல்,
எரிந்து சாம்ப லாகட்டும்! - நம்
இன இழிவு நீங்கட்டும்! - இங்கு
எல்லாரும் சமமெனும் நிலை
இறுதி ஆகட்டும்! - ஆழ்ந்த
இருள் போகட்டும்! (மனு )

உரிந்து போன தோல்களுமாய்
உடைந்து போன எலும்புமாய் - நெஞ்சம்
கரிந்து போன தமிழர் வாழ்வு
கசடு நீங்கிப் பொலியட்டும்! (மனு )

தெரிந்து செய்யும் கொடுமைகளால்
தீமை சேர்க்கும் கயமையால் - வாழ்வு
சரிந்து போன தமிழரினம்
சம உரிமை ஏற்கட்டும்! (மனு )

தாழ்ச்சி நீங்கி, மாட்சி ஓங்கத்
தமிழர் ஒன்று சேரட்டும்! - பகை
வீழ்ச்சி பெற்று மாய்ந்து போக
விளைச்சல் உறுதி ஆகட்டும்! (மனு )

வேதம் ஒழிக! புராணம் ஒழிக!
வேற்றுமைகள் நீங்குக! - இழி
சாதி ஒழிக! மதமும் ஒழிக!
சமன்மை பொதுமை ஓங்குக!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/209&oldid=1437583" இலிருந்து மீள்விக்கப்பட்டது