பக்கம்:கனிச்சாறு 2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


147

தமிழுணர்வில்லாத பிறவிகளைப் போற்றாதீர்!


தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும்,
தமிழினத்தின் எழுச்சிக்கும்
தமிழ்நிலத்தின் விடுத லைக்கும்,
குமிழ்க்காத வெறுநெஞ்சும் -
கூறாத தோல்வாயும் -
குதித்தெழா மரத்தின் காலும்
சிமிழ்க்காத புண்கண்ணும், -
செய்யாத கூன்கையும்
சினக்காத வெற்று ணர்வும் -
இமிழ்கின்ற கடல் நிலத்துள் -
எங்கோவோர் வெற்றிடத்தில்
எவ்வுருவோ டிருக்கு மாயின்,

அவ்வுருவைத் தமிழுருவாய் -
அவ்வுடலைத் தமிழுடலாய் -
அவ்வுயிரைத் தமிழி னுயிராய் -
எவ்வகையும் கொள்ளாதீர்;
எம்மதிப்பும் கொடுக்காதீர்;
எவ்வழியும் இணைசெய் யாதீர்!
ஒவ்வாதீர் அதன்பேச்சை;
உரையாதீர் அதனிடத்தில்;
உறையாதீர் அதனோ டென்றும்!
செவ்வகையிற் பிறந்திருக்கும்
செம்பிறவி என்றதனைச்
சிறிதேனும் போற்றி டாதீர்!

தசைத்திரளை யாய்மதிப்பீர்!
தான்தோன்றி யாய்நினைப்பீர்!
தமிழினத்தில் தவறித் தோன்றி
வசைக்குரிய இழிவுருவாய்
வாய், மூக்கு, கண், காது
வைத்தவெறுஞ் சடலம் என்றே,

இசைத்தெண்ணி அதைத்தவிர்ப்பீர்!
எச்செல்வம் எவ்வறிவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/254&oldid=1437464" இலிருந்து மீள்விக்கப்பட்டது