பக்கம்:கனிச்சாறு 2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  227


153

இந்தியா என்றால்
பார்ப்பனீயமும் முதலாளியமும்!


இந்திய ஆட்சி யென்றால்
இந்திதான் இருக்கும்; இந்திக்
காரன்தான் ஆட்சி செய்வான்!
முந்திய நலன்கள் முற்றும்
பார்ப்பான்தான் நுகர்வான்; மற்றும்
முதலாளி கூட்டுச் சேர்வான்!
பிந்திய வருணத் தார்கள்,
பிற்பட்டோர், தாழ்த்தப் பட்டோர்,
பிறவியில் வறியோர் யாவும்
சிந்திய நலன்க ளைத்தான்
போராடித் தின்னல் வேண்டும்!
சிறுமையால் சாதல் வேண்டும்!

அனைத்திலும் பார்ப்ப னர்தாம்
ஆளுமைத் தலைமை ஏற்பார்!
அவர் இனத் தவரை யேதாம்
வினைத்துணை யாக்கிக் கொள்வார்!
வேற்றினத் தவருள் நல்ல
வீடண ராகப் பார்த்து,
மனைத்துணை வியரைக் கூட
மாண்பும் மா னமும்இ ழந்தே,
மருவிட அவர்க்குத் தந்தே
எனைத்துணைச் செயலென் றாலும்
எளிதாகச் செய்து கொள்வார்!
‘இம’ப்பொருள் திரட்டி வாழ்வார்!

பார்ப்பன ரில்,வேங் கட்ட
ராமனென் றாலும், இராசீவ்,
செயலலி தா-என் றாலும்,
ஆர்ப்பரித் தெழுதும் ‘துக்ளக்’,
‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’
‘தினமலர்’-‘மணி’-என்றாலும்
நேர்ப் பொருள் உரை,பேச் செல்லாம்
செந்தமிழ் மொழி,இ னத்தைச்
இனத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/263&oldid=1437473" இலிருந்து மீள்விக்கப்பட்டது