பக்கம்:கனிச்சாறு 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


32  பகையே விலகுக!

ஆர்த்த முரசொடு கொம்பும் முழங்க
அருந்தமிழர்
சீர்த்தி விளங்க நெடுங்கொடி தூக்கிச்
செறுவிழிவேல்
கூர்த்த மறவர் களிற்றொடும் போந்தார்!
குலைநடுங்கிப்,
போர்த்த இருளே, பகையே, விலகுக
பொக்கெனவே!

-1963



33  அடிமைக் கூட்டம்!

நாயடிமை செய்பவராய்த் தமிழரெல்லாம்
நலிகையிலே, அமைச்ச ரெல்லாம்
போயடிமை செய்கின்றார் வடவர்க்கே;
அவர் வாய்ச்சொல் தலைமேற் கொண்டே!
வாயடிமை கொண்ட தமிழ்த் தலைவரெல்லாம்
முழங்கிடுவார்; வளர்ச்சி காணார்!
தாயடிமை யுறக்கண்டும் அவள்மானம்
விலைபோக்கும் தகைமை யோரே!

-1964
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/90&oldid=1424747" இலிருந்து மீள்விக்கப்பட்டது