பக்கம்:கனிச்சாறு 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உரு

என்னைச் சிறை செய்யினும் செய்க, என்தலை கொய்யினும் கொய்க - என்று அன்றைய செயலலிதா அரசுக்குச் சூளுரைக்கிறார் பாவலரேறு.

104. இராசீவ் கொலைக்குக் கரணியமான ‘தானு’ எனும் கன்னி இளமுகை, வீணனுக்கு எதிராய் வெஞ்சினம் கொண்டு ஆற்றிய அருஞ் செயலை வியந்து அவளின் ஈகப் புகழ்க்கு இவ்வுலகே நிகராகாது என்கிறார் பாவலரேறு, இப்பாடல் ‘நூறாசிரியம்’ தொகுப்புள் 66-ஆம் பாடலாக முகிழ்த்துள்ளது.

105. புரட்சி வேந்தனாய்ப் பீடுறநிற்கும் பிரபாகரனை எச்சில் சோற்றுக்குக் காட்டிக் கொடுக்கும் மாகொடியன்களாய் உள்ள வாழப்பாடி, மூப்பனார், வீரப்பன், இராசாராமன்கள், அனைவரும் தமிழப் பிறவியைத் தாங்கியதற்கு வெட்கப்படுவது நல்லது என்றும், அதனினும் உயிரைத் துறப்பதும் நல்லதே என்றும் இடித்துரைக்கின்றார் பாவலரேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/26&oldid=1437718" இலிருந்து மீள்விக்கப்பட்டது