பக்கம்:கனிச்சாறு 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


16  எச்சரிக்கை!

முன்னம் பறித்த
முழுமைத் தமிழ்நிலத்தைத்
தன்னால் திருப்பித்
தராமல் இருப்பாரேல்
கன்னல் தமிழ்மொழியால்
கட்டுண்டு பாய்ந்தெழுந்தே
இன்னல் விளைப்போமென்
றெச்சரிப்பாய் பூங்குயிலே!

-1966


17  வேண்டும் விடுதலை!


“ஆண்டுநூ றானாலும்
அன்னைத் தமிழ்நாடு
வேண்டும் விடுதலை
எண்ணம் விலக்கோம்யாம்;
பூண்டோம் உறுதி!
புறப்பட்டோம்” என்றேநீ
மூண்ட இடியாய்
முழங்காய் தமிழ்மகனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/47&oldid=1424538" இலிருந்து மீள்விக்கப்பட்டது