பக்கம்:கனிச்சாறு 3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  37


35  அடிமை நினைவுக்கு அழல் மூட்டுக!

அடிமை நினைவை அனற்கா டாக்கிட
அழலேந்துக ஒருபுறம்!
அறியாமைக்கே தீச்சுடர் காட்டி
அனல்மூட்டுக மறுபுறம்!

படிமை கொண்டான் தமிழன்; அவன்தன்
மானம்
பற்றி எரிந்திட,
மண்டெரி மூட்டிச் சோம்பல் பொசுக்குக!
மருளைத் தீய்க்க ஒருபுறம்!

மிடிமை கண்டான் தமிழன்; அவனின்
மீளா வறுமையைக் கொளுத்துக!
மேட்டுக் குடியினர் போட்ட கணக்கினை
மீறும் நெருப்பில் உருட்டுக!

குடிமை பேண இளைஞர் எழுக!
கோதையர் எழுக எழுகவே!
குப்பைச் சருகாய்த் தீமைகள் அனைத்தும்
கொளுத்துக! விடுதலை மலர்கவே!

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/66&oldid=1424556" இலிருந்து மீள்விக்கப்பட்டது