இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48 ☐ கனிச்சாறு - மூன்றாம் தொகுதி
46 கதிரவ விடுதலை ஒளிவான் படருமோ?
உலகம் முழுதும்
தமிழர் முழக்கம்!
உறக்கம் தவிர்ந்தது!
உரிமை ஒலித்தது!
கலகம் அடங்கிக்
காரிருள் கலையுமோ?
கதிரவ விடுதலை
ஒளிவான் படருமோ?
-1983
47 பொருளியல் பொதுமைக்கும் புரட்சிக்கும் வித்து!
மொழி,இன விடுதலை வேண்டும்! - பின்
முற்றுமாய்த் தமிழ்நாட்டு விடுதலை வேண்டும்!
வழியது வல்லாமல் தமிழர், - வேறு
வகையினில் முன்னேறும் வாய்ப்பொன்றும் இல்லை!
(மொழி)
அழியாமல் இனத்தினைக் காக்கும், - மொழி
யன்றோநம் தமிழரை ஓர் அணி சேர்க்கும்!
இழியாமல் மேல்நின்று தூக்கும், - தமிழ்
ஏற்றமே மதம்,சாதி வேரினைத் தாக்கும்!
(மொழி)
முதியவர் இளையவர் வருக! - இன
முனைப்பிற்கு அவரவர் உழைப்பினைத் தருக!
புதுமைக்கும் விளைவுக்கும் சொத்து! - தமிழ்,
பொருளியல் பொதுமைக்கும் புரட்சிக்கும் வித்து!
(மொழி)
-1984