பக்கம்:கனிச்சாறு 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  123


24. பகை.

உள்ளப் புகையின் உயர்நிலை பகையே!
உயர்சால் பின்பகை பகையே!
உள்ளப் பகையின் உயர்நிலை அழிவே!
உறுபகை பகைத்திடு மொழுங்கே!
எள்ளப் படுதலு மிழிசேர் பகையே!
இன்சொற் பணிவதன் பகையே!
குள்ளப் பாங்கினார்க் குறுதுணை யஃதே!
கொள்வார் கொளப்படு வாரே! 25

25. தீமைக்கஞ்சல்.

நஞ்செனுந் தீமைக் கஞ்சிடான் நலிவான்;
நட்டார்க் கவன்தீங் கிறுப்பான்!
பஞ்செனத் தோன்றிப் படுதுயர் அழுத்தும்!
பருமுட் சேக்கையி னொக்கும்!
எஞ்ஞான் றைக்குந் தீமையில் நன்மை
எட்டுணை யலர்வது மிலதால்
அஞ்சார் அஞ்சுக; அஞ்சுக தீமைக்
கஞ்சுவார்க் கஞ்சுமின் நிலனே! 26

26. நன்மைக் கயராமை.

அறிவெனுங் கொழுவா லுளப்புல னுழுதே
அன்பெனும் நறுநீர்ப் பாய்ச்சிக்
குறியெனும் உளங்கொள் நல்விதை தேர்ந்து
குறிப்பெனும் பொழுதறிந் தூன்றி,
நெறியெனும் எருவிட் டின்சொலிற் காத்தே,
நெகிழ்வெனும் வளர்களை யகற்றிச்
செறிவுற விளைங்கால் சிறியர்புள் ளோட்டிச்
சிறப்புறல் நறுவிளை வென்பாம்! 27

27. முன்னறிவு.

புகையினும் பெருநெருப் பாகுமென் றறிக!
புனற்றுளி வெள்ளமென் றுணர்க!
பகையினுக் கடிப்படை சொல்திரி பென்க;
பயன்பெறப் பாடுவித் தென்க;
நகைமுகம் நட்பினுக் கடிநலந் தெளிக!
நறுவினை உயர்திரு உள்க;
திகைவறல் புலமையின் முதற்படி நினைக;
தீயுரை கெடற்கறி குறியே! 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/158&oldid=1444185" இலிருந்து மீள்விக்கப்பட்டது