பக்கம்:கனிச்சாறு 4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 கனிச்சாறு – நான்காம் தொகுதி


அருளென்றும் அன்பென்றும்
அறமென்றும் வெளிப்பேசிப்
பொருளொன்றே குறிக்கோளாய்ப்
புனைவிட்டுத் திரிகின்ற
அடிக்கின்ற பணங்காசில்
அரைக்காசுக் கறஞ்செய்து
குடிக்கின்ற குடம்பாலில்
குவளைப்பால் கொடைவார்க்கும் (ஆர்ப்பாட்ட)

புலைகோடி செய்தேனும்
பொருள்கோடி தொகுத்தோர்கள்
கலைகோடி உருச்செய்து
கடவுட்குத் தேர்செய்யும் (ஆர்ப்பாட்ட)

படுக்கப்பூ மெத்தையிட்டு
பன்னீரில் உடல் கழுவி
உடுக்கப்பட் டுடைகேட்கும்
உன்மத்தர் நிறைந்தவெறும் (ஆர்ப்பாட்ட)

-1971


103

தப்பித் தவறியே மாந்தனாய்ப் பிறந்தவன்!


தப்பித் தவறியே மாந்தனாய்ப் பிறந்தவன்
ஒப்புக்கு வாழ்கிறான் உலகில் - கொஞ்சம்
உப்புக்கு விடிவில்லை வாழ்வில் - அவன்
வாழ்வில் - வெறும்
மெப்புக்குப் பேசியே
மேலுக்குப் பூசியே
தப்புக்குப் பூட்டிடுவீர்கள்- ‘சரி
தான்’-என நாட்டிடுவீர்கள்!

காலுக்குச் செருப்பின்றிக் கையிலோர் காசின்றி
மேலுக்குத் துணியின்றி வாழ்வான் - உடல்
தோலுக்குக் காப்பின்றி நோவான் - நொந்து
சாவான் - ஆவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/189&oldid=1444472" இலிருந்து மீள்விக்கப்பட்டது