பக்கம்:கனிச்சாறு 4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202  கனிச்சாறு – நான்காம் தொகுதி


146

ஊக்கத்தைக் கைவிடாதே!


குறை சொல்ல ஆயிரம்
பேர் வருவார் ஒரு
கோலை நடமாட்டார்!-சென்று
மறைவினில் ஆயிரம்
சொள்ளை சொல்வார்-செய்ய
மனங் கொண் டிடவும் மாட்டார்!

ஆக்கிப் படைப்பதில்
சுவை தேறுவார் - ஒன்றை
ஆக்க வரமாட்டார்! - உழைத்துத்
தேக்கிய விளைவுக்குக்
கணக்குக் கேட்பார் பங்கு
கேட்கவும் கூச மாட்டார்!

இவ்வாறு பற்பலர்
இருந்திடுவார் தம்பி
எண்ணி வருந்தாதே! - உனக்கு
ஒவ்வாத பேர்களை
ஒதுக்கிச் செய்வாய் - தம்பி
ஊக்கத்தைக் கைவிடாதே!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/237&oldid=1444556" இலிருந்து மீள்விக்கப்பட்டது