பக்கம்:கனிச்சாறு 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204  கனிச்சாறு – நான்காம் தொகுதி


148

வெற்றி எதிர் வருமே !


மயக்கு கின்ற கவர்ச்சி கண்டு
மனம் மயங் காதே! - உலகம்
வியக்கும் அரிய செயலைச் செய்ய
உளம் தயங் காதே!

ஊக்கம் தளர்த்தும் ஆசைக் குன்றன்
உணர்வி ழக்காதே! - மக்கள்
ஊக்கம் கொள்ளும் செயலைச் செய்ய
அறிவி ழக்காதே!

தோல்வி கண்டு தூற்றல் கண்டு
துவண்டு போகாதே! - இடையில்
நால்வ கையாய் வரும்து ணைகள்;
நலிந்து சாகாதே!

உண்மை, ஒழுக்கம், ஊக்கம், முயற்சி,
உறுபயன் தருமே! - மனத்தில்
திண்மை வேண்டும்; நேர்மை வேண்டும்;
வெற்றி எதிர் வருமே!

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/239&oldid=1444562" இலிருந்து மீள்விக்கப்பட்டது