பக்கம்:கனிச்சாறு 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 கனிச்சாறு – நான்காம் தொகுதி


பள்ளிப் படிப்பினில் மனத்தைப் பதியவை!
அள்ளி அள்ளிஉண்; ஆர்வ மொடு, கல்!
கல்வி தருபவர் கல்வித் தந்தை!
செல்வம் என்பது கல்விச் செல்வமே!
பொருள் நலம் புல்லியர் கைகளில் இருக்கும்!
தேயாப் பொருளே கல்விச் செழும்பொருள்!
ஓயாது தேடு! மேம்படு உலகில்!
செம்புது வெள்ளமாய் உலகினில் பாய் நீ!
நம்புவாய் தம்பி, நீ நாளைய தலைவன்!

-1968


18

வாழ்க்கை பொது!


வானமென்னும் கூரையின்கீழ்
வந்துருளும் மண்ணுலகம்!
வந்துருளும் மண்ணுலகில்
தம்பியே தம்பி நாம்
வாழுகின்ற மக்களடா
தம்பியே தம்பி!

மக்களெனும் பேரினத்தில்
மகிழ்ந்திருப்பார் சிற்சிலபேர்!
மகிழ்ந்திருக்கும் அவரடிக்கீழ்
தம்பியே தம்பி - பலர்
மாளுவதும் கொடுமையன்றோ
தம்பியே தம்பி!

மழைபொழிந்து பயிராகும்!
மலைபோலும் நெல்விளையும்!
மழையும் பயிர்விளைவும்
தம்பியே தம்பி - எல்லா
மக்களுக்கும் பொதுவன்றோ
தம்பியே தம்பி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/67&oldid=1440501" இலிருந்து மீள்விக்கப்பட்டது