பக்கம்:கனிச்சாறு 5.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


பொதுமை நினைவை வளர்ப்பாய் - அதைப்
பூவுல கெங்கணும் பரப்ப முனைவாய்!
புதுமை விளைவுகள் செய்வாய் - உள்ளப்
புரட்சிக்கு அறிவென்னும் நன்னீரைப் பெய்வாய்!

நீர்பொது; நிலம்பொது தம்பி! - இந்த
நெறிமுறை பிழைபடல் பெருந்தீது தம்பி!
பார்பொது; பயன்பொது தம்பி! - நலம்
பாடு படுவோர்க்கே உரியது தம்பி!

பழங்கதை பேசிடு வோர்கள் - குலப்
பகுப்புகள் தம்மைப் புகுத்திடு வோர்கள்
விழுங்கிடும் செல்வத் திருடர் - இன்ன
வீணர்எல் லாரையும் வீழ்த்துக தம்பி!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/130&oldid=1425736" இலிருந்து மீள்விக்கப்பட்டது