பக்கம்:கனிச்சாறு 5.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


129

பழியன்றோ மிஞ்சும்!


ஆங்கிலத்தைக் கற்பதுதான்
உயர்வா? - பாப்பா
அழகுதமிழ் கற்றுவரல்
அனைத்துக்கும் தாழ்வா?

தாங்கிலையே உன்முடிவை,
பாப்பா - தமிழ்த்
தாய்மொழியைத் தள்ளிவிடல்
இனத்திற்குக் காப்பா?

கொச்சைத்தமிழ் பேசுவது
நன்றா? - பாப்பா
கொஞ்சுதமிழ் பிழையின்றிப்
பேசுவது நன்றா?

பச்சைத்தமிழ்ப் பாலினிலே
நஞ்சைப் - பாப்பா
பாய்ச்சுவதும் கேடன்றோ?
பழியன்றோ மிஞ்சும்!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/162&oldid=1444908" இலிருந்து மீள்விக்கப்பட்டது