பக்கம்:கனிச்சாறு 5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனிச்சாறு ஐந்தாம் தொகுதி


168. உள்ளமே ஆற்றல் பொருந்தியது. எனவே அதை உயர்த்தி நிறுத்திச் செயல்படச் சொல்கிறது பாடல்.

169. உணர்வு தோன்றி, சொல்வடிவாகி, எழில் செயலுமாகி உலகோர்க்கு இன்பம் கொடுப்பதே பயன் - என்கிறது இப்பாடல்.

170. எவ்வளவு உழைத்தாலும் ஆவதே விளைவாகும். எண்ணமானது செயலாய் விளைந்திடத் திட்டம், ஆள், பொருள் என்று பல தேவை என்கிறார், பாவலரேறு.

171. கல்விக்குரியது மட்டும் படித்திடாமல் அறிவு நூல்களையும் தேர்ந்து பயில வேண்டும். ஏதோ வாழ்ந்தோம் என்றிருக்காமல் தெளிவாய் வாழத் திறனைப் பெறுதல் வேண்டும் என்று அறிவுறுத்தும் பாடல்.

172. பூப்பவையெல்லாம் காய்ப்பதில்லை. நினைப்பனவெல்லாம் நிகழ்த்தியது என உலகியல் நிலையை விளக்குகிறது பாடல்.

173. சொன்னபடி செய்வது பெரிது. மக்களுக்குத் தொண்டாற்றுவது பெரிது; பெரிது; செல்லும் வழியைத் தீர்மானித்துக் கொண்டு நடந்தால்தான் சிறப்பு என்றுரைக்கிறது இப்பாடல்.

174. “சோர்வும் சோம்பலும் உனை மென்று தின்பன! சுறுசுறுப்பே உனை உயர்த்திடும். தீர்வுசெய் முனைந்து செல்!” என்று அறிவூட்டும் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/29&oldid=1424495" இலிருந்து மீள்விக்கப்பட்டது