பக்கம்:கனிச்சாறு 5.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


7  திருக்குறள் அறிவு!

கற்க! கற்க! கற்க!
கற்பன வற்றைக் கற்றவை வழியில்
நிற்க! நிற்க! நிற்க!

சொல்க! சொல்க! சொல்க!
சொல்லுஞ் சொல்லால் மற்றவர் சொல்லை
வெல்க! வெல்க! வெல்க!

பணிக! பணிக! பணிக!
பணிவாய் நின்றே பலவுஞ் செய்யத்
துணிக! துணிக! துணிக!

விருந்து! விருந்து! விருந்து!
விருந்துக் கிட்டு மிகுந்ததை என்றும்
அருந்து! அருந்து! அருந்து!

பொறுக்க! பொறுக்க! பொறுக்க!
பொறுத்துக் கொண்ட தீமையை உடனே
மறக்க! மறக்க! மறக்க!

எண்ணு! எண்ணு! எண்ணு!
எண்ணிய வற்றுள் ஏற்றதை உடனே
பண்ணு! பண்ணு! பண்ணு!

ஒழுகு! ஒழுகு! ஒழுகு!
ஒழுக்கம் ஒன்றே கற்றவர்க் கென்றும்
அழகு! அழகு! அழகு!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/42&oldid=1424523" இலிருந்து மீள்விக்கப்பட்டது