பக்கம்:கனிச்சாறு 5.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


21  திருக்குறள்!

பெரிய வர்க்குப் பெரிய நூல்!
சிறிய வர்க்கோர் அரியநூல்!
உரிய வர்க்கும் உரிய நூல்!
உலகில் யார்க்கும் உயர்ந்த நூல்!

அன்பைப் பற்றிச் சொல்லுமே!
அறத்தை விளக்கிக் கூறுமே!
பண்பை எடுத்துக் காட்டுமே!
பணிவை உயர்வை ஊட்டுமே!

உலகில் யார்க்கும் ஒருகுரல்!
உண்மை பேசும் திருக்குறள்!
பலவும் அறிந்து கொள்ளலாம்!
படித்து மடமை தள்ளலாம்!

-1969


22  வேண்டும்!

பசிக்கு வேண்டும் சோறு!
பயிர் செழிக்க ஆறு!
வசிக்க நல்ல வீடு!
வாய் மணக்கப் பாடு!

கனி கொடுக்க மரம்!
கொண்டைக்குப் பூச் சரம்
துணி எடுக்கக் காசு!
தூக்கி முன்னால் வீசு!

பள்ளிக் கூடம் போவேன்!
பாடம் நன்றாய்க் கேட்பேன்!
வெள்ளிப் பணம் பார்ப்பேன்!
வேண்டும் பொருளைச் சேர்ப்பேன்!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/56&oldid=1424850" இலிருந்து மீள்விக்கப்பட்டது