பக்கம்:கனிச்சாறு 5.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


29

குடையும் செருப்பும்!


குடையும் செருப்பும் பேசின - பல
குறைகள் சொல்லி ஏசின.
நடையில் நடந்த நாடகம்! இதை
நாமெல் லாரும் பாடுவோம்!


குடை:செத்த மாட்டின் உறுப்பே - தோல்
செருப்பே உன்மேல் வெறுப்பே!

செருப்பு:முகத்தைப் பார்த்தால் கறுப்பே! உடல்
முழுதும் கம்பி விரிப்பே!

குடை:காலில் கிடக்கும் எருமை! - உன்
கதையில் என்ன பெருமை?

செருப்பு:நெருப்பின் மீது நடப்பேன். - குத்தும்
நெருஞ்சி முள்ளில் படுப்பேன்!

குடை:நிழலை என்றும் கொடுப்பேன் - வந்து
நனைக்கும் மழையைத் தடுப்பேன்!

செருப்பு:காற்றால் உனக்கு நடுக்கம் - நல்ல
கடும் இருட்டில் ஒடுக்கம்!

குடை:நீரைக் கண்டுங்கி! நெருங்கி - நீ
நனைவாய் உடலும் சுருங்கி!

செருப்பு:இரவும் பகலும் நண்பன் - யார்க்கும்
என்னால் இல்லை துன்பம்!

குடை:கையில் பிடித்து மதிப்பார் உன்னைக்
காலில் போட்டு மிதிப்பார்!

செருப்பு:உனையும் நானே சுமப்பேன் - இதை
உணர்ந்து கொள்ளு வாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/62&oldid=1445004" இலிருந்து மீள்விக்கப்பட்டது