பக்கம்:கனிச்சாறு 5.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


31  நிறங்கள்!மாட்டு வண்டி!

கட்டுச் சோற்றைக் கட்டினார்;
காளை மாட்டைப் பூட்டினார்;
எட்டுக் கற்கள் போகவே,
ஏழு மணியை ஓட்டினார்!

ஒற்றை மாட்டு வண்டியாம்!
ஊர்ந்து போகு வண்டியாம்!
நத்தை போல மெல்லமாய்,
நகர்ந்து போகும் வண்டியாம்!

தாத்தா ஏறிப் போனதாம்;
'தடக்குப் புடக்கு' வண்டியாம்!
கூத்துப் பார்க்கப் போகவே
குடும்பம் போன வண்டியாம்!

கற்கள் நிறைந்த தடத்திலும்,
காட்டுப் பாதை, மணலிலும்,
முட்கள் சேர்ந்த வழியிலும்
முனைந்து போகும் வண்டியாம்!

அரிசி, உப்பு, மூட்டைகள்,
அடுக்குச் சட்டி, பானைகள்
உரசிக் கொண்டு இராப்பகல்
ஊர்ந்து போகும் வண்டியாம்!

இரும்புப் பட்டை சுற்றிய
இரண்டு பெரிய சக்கரம்!
பிரம்பு, மூங்கில் பின்னிய
பெரிய கூடு மேற்புறம்!

மொட்டை யான வண்டியாம்!
முடுக்க மான எருதுகள்!
கட்டை தூக்கிப் போய்வரும்!
கரும்புக் கட்டும் மேல்வரும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/64&oldid=1424860" இலிருந்து மீள்விக்கப்பட்டது