பக்கம்:கனிச்சாறு 5.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


41  பட்டினம்!

நீள மான வீதிகள்;
நெருக்க மான வீடுகள்;
வானை எட்டும் கட்டடம்;
வனப்பு மிகுந்த பட்டினம்!

பத்துப் பேருக் கோர் அறை!
பத்துக் குடிகள் ஒருமனை!
பத்து வீட்டுக் கொருமரம்!
பத்து வீதிக் கொருகுழாய்!

தொத்து நோய்கள் எளிதிலே
தொத்திக் கொள்ளும் பட்டினம்!
கற்றுக் கொள்ளப் பள்ளிகள்
கணக்கி லாத பட்டினம்!

போக்கு வரத்து வண்டிகள்,
புகைகள், தூசு, தும்புகள்,
ஈக்கள், கொசுக்கள் யாவுமே
எங்கும் நிறைந்த பட்டினம்!

கூட்டம் நிரம்பி வழிந்திடும்;
கொள்ளை கொலைகள் மிகுந்திடும்;
ஆட்டம் கூத்து இராப்பகல்!
ஆர வாரப் பட்டினம்!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/72&oldid=1424877" இலிருந்து மீள்விக்கப்பட்டது