பக்கம்:கனிச்சாறு 6.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


‘சங்கம்’ வளர்த்த தமிழ் மொழி போல் - நின்று
சாகாமல் வாழ்வதும் எந்த மொழி?
பொங்கிட்ட ஆழிக்குப் பொன்னான ஏடுகள்
போகப் பெருமை கொண்ட தெந்த மொழி?

கனிதமிழ் நாட்டினர் என்றுரைக்கு -,மக்கள்
காது கொடாமல் இருப்ப தென்னோ - இந்த
நனிதமிழ் நாட்டுக்குத் தீங் கென்று கண்டும் - நாம்
நட்ட கற்கள் போல் இருப்ப தென்னோ?

(ஓரிரு வடசொற்கள் களையப்படவில்லை)


-1947இல் எழுதி, 1952இல் வெளிவந்தது.



55

அருவி!



கடல் நீரை மேகம் உண்டு,
கருவுற்று, மென்பூந் தென்ற(ல்)
உடன் சேர்ந்தே உள்ளத் தன்பை
உலகினுக் கெடுத்துக் காட்டுங்
கடனென மழையை ஈன,
களிப்பினால் புனற் குழந்தை,
இடமதை விட்டு, வேறோர்
இடஞ்செலும் அழகின் ஆறு! 1

ஓடியும், குதித்தும், நீண்டும்
ஒடிந்துடல் வளைந்தும் பள்ளத்
தாடியும், இரைந்தும் சென்ற
ஆறு, பின் பள்ளத் தாக்கை
நாடி, மேல் நின்று கீழே
‘நறுக்’கென வீழ்தல் காணின்
கோடியாய் இன்பம் பொங்கிக்
கூத்திடும் அழகு நெஞ்சில்! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/106&oldid=1445204" இலிருந்து மீள்விக்கப்பட்டது