உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  37


நான்சிறிது மறந்தாலும், பாலுக் கென்னை
நாடிவரும் குழந்தைதன் எழிலில் உங்கள்,
மானுடலின் நிறங்கண்டும், உருவைக் கண்டும்
மாளாமல் நீர் சொரியும் கண்க ளோடே
ஏன் வாழ வேண்டும்நான், அத்தான்? என்னை
ஏன் மாள வைக்கின்றீர்? முகிலில் ஏறி
வான்வழியே வந்திறங்கிப் பேதை யென்னை
வாரியணைத் திடுதற்கு வாரீர் இன்றே. 5

-1954
 

24

வளைத்தாய்; வளைத்தேன்!


வில்வளைத்தாய்; பின்னுன்
விழிவளைத்தாய்! அன்பென்னும்
சொல்வளைத்தாய்; இன்பத்
தொகைவளைத்தாய்!, யானுமென்
கைவளைத்தேன்; மின்னல்
இடைவளைத்தேன்; கைக்குளுன்றன்
மெய்வளைத்தேன்; தேன்சுவைத்தேன் மேல்!

-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/63&oldid=1445122" இலிருந்து மீள்விக்கப்பட்டது