உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 கனிச்சாறு – ஆறாம் தொகுதி

கண்களைப் பொத்திடுவான் - இலைதன்னைக்
காதில் நுழைத்திடுவான்!
தண்கடல் வெள்ளலைபோல் - என்னுடலைத்
தாவி யணைத்திடுவான்!
குறும்பினை என்ன சொல்வேன்? - தோழியவன்
கூத்தினை என்ன சொல்வேன்?
கரும்பின் தமிழ்ச் சுவைமேல்
புலவர் கொள்
காதலைக் கொண்டேனடி!

-1954


27

நாணமென்ன?


நானிருக்க என தாசைக்கு துணை நீயிருக்க
நமைச் சுற்றிலும் சோலை யிருக்க
நட்ட நடுவினில் நீயிருக்க - இன்னும்
நாணமென்ன உனக்கானதென்ன - இளம்
நல்லிடையினை வந்து ஈந்திடடி
தேனிருக்கும் மலர் வாயிருக்கும் மனம் உள்ளிருக்கும்
தின்றிடத் தீராப் பசியிருக்கும் - இரு
குன்றெனத் தோள்களி ரண்டிருக்கும் - இனித்
தேவையென்ன உனக் கானதென்ன - இசைத்
தென்றலென வந் திணைந்திடடி!

வானிருக்க நமைச் சுற்றிலும் வல்லிருள் போர்த்திருக்க
வட்டநில வெழில் தானிருக்க - காதல்
வாட்டிடும் எண்ணம் நமக்கிருக்க - இன்னும்
வெட்கமென்ன உனக் கானதென்ன என்றன்
பக்கலில் வந்தெனைத் தொத்திடடி
கானிருக்கும் மலர் வாறியிறைக்கும் மணமிருக்கும் குளிர்
காற்றடிக்கும் படி ஊற்றிருக்கும் அதை
மாற்றிடக் காதற் கனப்பிருக்கும் - நிற்கத்
தயக்கமேன் உனக் கான தென்ன இளம்
ஆரணங்கே யிதழ் மாந்திடடி!

-1954 (?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/66&oldid=1445127" இலிருந்து மீள்விக்கப்பட்டது