உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  61


46

இன்பமேன் தோழி!


பொன்னேபோ லுடை யுடுத்திப் பொட்டிட்டு மலர்ச்சூடி
தன்னேரி லாதபெருந் தடங்கண் ணில் நகையூட்டி
ன்னாள் வரையில்லா இன்பமேன் தோழி யென்றேன்
பன்னாள் மறந்திருந்தோன் பறந்துவந்தானென்று சொன்னாள்!

குளங் கொண்ட தாமரையின் கொடிதுவளக் கண்மலரோக்
குளம் போலுங் கண்ணீராற் றோய்ந்திருந்தே யின்று மட்டும்
விளங்கும் மகிழ்ச்சிக்கு விரிவென்னத் தோழியென்றேன்!
உளங் கண்டோன் என்னிடத்திற் கோடிவந்தா னென்று சொன்னாள்!

முழுநிலவைக் கருமைநிற முகில்மூடி யிருந்தாற் போ
லழகுமுக வொளி காணா தடர்ந்த குழல் மூடியின்றும்
பழகுதமிழ்ப் பாவலரின் முகம் போ லென் தோழி யென்றேன்
கழகஞ் சொல் கல்விகற்றேக்கடி துவந்தா னென்று சொன்னாள்!

-1960 (?)




47

வஞ்சித்தாழிசை




மடப்பிடியை மதவேழம்
தடக்கையான் வெயின்மறைக்கும்
இடைச்சுர மிறந்தார்க்கே
நடக்குமென் மனனே காண்.

பேடையை யிரும்போத்துத்
தோகையான் வெயின்மறைக்குங்
காடக மிறந்தார்க்கே
ஓடுமென் மனனேகாண்

இரும்பிடியை யிகல்வேழம்
பெருங்கையாண் வெயின்மறைக்கும்
அருஞ்சுர மிறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண்.
.....................(முடிவுறாப் பாடல்)......................

-1960 (?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/87&oldid=1445169" இலிருந்து மீள்விக்கப்பட்டது