உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


48

மருத்துவக் காதல்!


(நகை யோவியம்)

தலைவி
உமக்கெனப் பூத்தவள் நானிருக் கின்றேன்;
ஊர்ப்பெண்ணைப் போய்த்தொட லாமா - அத்தான்!
உதையடி மிகப்பட லாமா? - நமை
ஊர்சிரித் திடவிட லாமா? - அட
உங்களுக்கும் மதிகெட்டுப் போமா? - கயி
றொருமுழங் கொண்டுதர லாமா?- வினை தாமா?

தலைவன்
முக்கனி பிசைந்த முழுச்சுவை போலும்
முத்தமிழில் தேன்பால் கலந்தாய் - வாய்
முத்தமொன்று நேற்றிரவில் தந்தாய் - இன்று
முழுதும் இனித்ததடி என்வாய்! - அதில்
மூழ்கி யிருக்கையில் நீ வந்தாய்! - அந்த
மூளியினைத் தொட்டதற்கா
நொந்தாய்,உடல் வெந்தாய்?

தலைவி
எட்டியே இருங்கள்; இழிசெயல் புரிந்தீர்!
எத்தனைநாள் இந்தவகை தொட்டீர் - பிற
கெத்தனைபேர் கைநழுவ விட்டீர்? - அதில்
எவ்வெவர்பால் நல்லவுதை பட்டீர் ஊர்
இருக்கும் இருப்பில் நிலை கெட்டீர் - இனி
என்றனைக்கை நீட்டியுடல் தொட்டீர்,புகழ்கெட்டீர்.

அவன்
கதையினைக் கேளடி; கருத்தினில் கொள்ளடி!
காயம்பட்ட தென்றாள்; மருந் திட்டேன்! அவள்
கையையதற் காகவெனத் தொட்டேன்! - இதைக்
கண்டடிக்கக் கோலெடுத்து விட்டான் - நிலை
கண்டவர்கள் உண்மைசொல, விட்டான் - அவன்
காலி; அவள் நீலி; நானும் பட்டேன்,பணிவிட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/88&oldid=1445172" இலிருந்து மீள்விக்கப்பட்டது