உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  63


அவள்
மருத்துவம் பயின்ற மன்னரே; கேளும்!
மதிகெட்டேன்; பார்த்தவிழி கெட்டேன் - உங்கள்
மாசகன்ற நெஞ்சைக்கீறி விட்டேன் - அங்கு
மங்கை யென்றன் சாயல்கண்டு விட்டேன் - உயிர்
மகிழ மகிழ அன்பை நட்டேன்! - இனி
மாளும் வரைக்கும் ஐயம் விட்டேன் - என
மலர்க்கையால் உங்கள்தலை
தொட்டேன் ஆட்பட்டேன்.

அவன்
பவழக் கனிவாய் இதழைக் காட்டடி;
பசித்திட வேண்டுமென்றன் அன்பை - உயிர்
பனித்திடப் பனித்திடத் தின்பை - எண்ணிப்
பார்த்ததற் கிணையெனப் பின்வை - நான்
பசித்தவன்; நிலாமுகம் முன்வை! - ஒரு
பார்வையில் ஈர்ந்திடுங் கண்,வை காதற் பண்,வை!

-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/89&oldid=1445173" இலிருந்து மீள்விக்கப்பட்டது